கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என அறிவித்துள்ளார். 2.50 கோடி […]
