வேலூர் மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் ஆடு, மாடு கால்நடைகளால் அடிக்கடி சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது என புகார்கள் கமிஷனர் அசோக்குமாருக்கு சென்றடைந்துள்ளது. அதன் அடிப்படையில் கால்நடைகளை அப்புறப்படுத்தும்படி கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று வேலூர் பழைய பஸ் நிலையம், இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்து சென்றனர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது […]
