தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார். இத்திட்டத்தின் மூலம் 1 -5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை – உப்புமா வகை ரவா உப்புமா […]
