சென்னை உயர் நீதிமன்றம் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு மலை வாசஸ்தலங்களில் மதுபான பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
