நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாற்று எழுந்தது. அதனால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுக் கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க, உயர்நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது. தமிழகத்தில் 5000க்கு மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 மாதம் […]
