ஊஞ்சலூர் அருகில் காலில் காயத்துடன் கிடந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப் பள்ளி அருகில் காலில் காயத்தோடு மயங்கிய நிலையில் ஒரு குரங்கு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வனக்காப்பாளர் கீர்த்தனாவுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு சாக்குப் பையில் வைத்து அருகிலுள்ள கொம்பனை புதூர் அரசு கால்நடை […]
