கருப்பு என்பது பலர் பயன்படுத்த விரும்பாத நிறம். அந்த நிற உடையை பலரும் வாங்கவும், அணியவும் விரும்புவதில்லை. கருப்பு நிற உடையை துக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் கருப்பு கயிறை காலில் கட்டிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வதால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகள் நெருங்காது. அதுமட்டுமல்லாமல் நம் எதிரிகள் அல்லது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களால் வைக்கப்படும் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற துஷ்ட சக்திகளிலிருந்து காக்கும். […]
