கடைக்காரருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் காஜா ரமேஷ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் ரூபாய் 145 கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கியுள்ளார். இந்த பிஸ்கட்டை சாப்பிட்ட ராஜாவின் தாயாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா பிஸ்கட் பாக்கெட்டை பார்த்தபோது அதில் தேதி காலாவதியாகி இருந்தது. இதனால் கடைக்காரருக்கு ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். […]
