காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவுசெய்து இருக்கிறோம் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது தொடர்பாக மந்திரி கிரண் ரிஜிஜு ஷில்லாங்கில் கூறியதாவது “சில பழைய சட்டங்கள் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் மீதான இணக்க சுமையை நாம் குறைக்கவேண்டும். சாமானிய மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆட்சி இருக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி விரும்புகிறார். தேவையற்ற சட்டங்கள் சாமானியர்களுக்கு […]
