காரைக்காலில் சென்ற சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தது. இதனையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பாக குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டி வாயிலாக விநியோகிக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் போகும் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த சூழ்நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]
