திமுக எம்.எல்.ஏ ,கே.பி.பி சாமி உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (58) உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. எம்.எல்.ஏ கேபிபி சாமி, 2016 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த எம்.எல்.ஏ கே.பி.பி சாமி 2006- 2011 தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக. மீனவர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
