நிதி அமைச்சரின் கார் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேர் முன்ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மதுரையை சேர்ந்த மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கை மாறன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை டி.புதுப்பட்டியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் […]
