பிரபல பதிப்பாளர் மற்றும் பத்திரிகையாளருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அரசு கடந்த 1957-ம் ஆண்டு உலகில் உள்ள பல சிறந்த மனிதர்களை ஊக்குவிக்கும் விதமாக செவாலியே விருது வழங்கி வருகிறது. இதில் செவ்வாலியே என்பதற்கு உயர்ந்த மனிதர் என்பது பொருள். இந்த விருது தமிழகத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் மொழிபெயர்ப்பாளரான வெ. ஸ்ரீராம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தற்போது காலச்சுவடு கண்ணனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு நவீன தமிழ் எழுத்தாளர் ஆவார். […]
