வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பிறகு இலங்கை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
