வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது: “குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கரையைக் கடக்க தொடங்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இதே நிலை தொடரும். அதி கனமழைக்கான வாய்ப்பு குறையும். இந்த தாழ்வு மண்டலத்தால் […]
