பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் சேர்ந்த மல்லிகார்ஜுனா இன்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது விநாயகர் கோயில் அருகே திடீரென்று கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரை விட்டு மல்லிகார்ஜுனா கீழே இறங்கியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் […]
