உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் சிங் ராவத் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
