கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சித்திரை வேலு(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கல்யாணி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சித்திரை வேலு தனது மனைவி கல்யாணி, மகன் சபாபதி(32), மருமகள் சோபி(28), பேரன் ராம்(5), பேத்தி பூஜா(2), உறவினர்களான இசக்கி(29), அகிலா(62), தனுஷ்(7) ஆகியோருடன் […]
