கார் விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்ட பூபதி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பனியன் செக்கிங் சென்டர் நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அனுப்பர்பாளையம் பகுதியில் வசிக்கும் பல்லவிக்கும் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஈரோடு சென்று விட்டு அவினாசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவினாசி பழங்கரை அருகில் […]
