சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்த எத்திராஜ்(70) என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாலையில் சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ […]
