கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர் ஜே.ஜே.நகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி டோல்கேட் அடுத்துள்ள மாருதி நகர் பேருந்து நிலையம் அருகில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தனர். […]
