கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளை 2 வேன்களில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த […]
