கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு முன்பு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த கார் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த […]
