மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சீதாராமம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சென்னையில் கிரீன்வேஸ் பகுதியில் அமைந்துள்ள அவருடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் பாஸ்கர் (57) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று துல்கர் சல்மானின் வீட்டில் இருக்கும்போது ஆன்லைனில் பீட்சா மற்றும் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். […]
