உத்திர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் அருகே ஜோயிடா தாலுகாவில் சிவபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காளி நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் காரில் இப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது தொங்கு பாலத்தின் மீது காரை ஓட்டி சென்றுள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை இளைஞர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். […]
