செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தியதோடு அவர் மீது 3 முறை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கோகுல் குமார்(30) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (26) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோகுல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் […]
