மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் ஒரு சந்தேகமும் தனக்கு கிடையாது. முதல்வர் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி ஆவார். […]
