கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வாக ஆறாம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகின்றது. இதை காண்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னை, மயிலாடுதுறை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு […]
