வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக குப்பைதொட்டி வைக்கும் நூதன திட்டத்தை காரைக்குடி நகராட்சி முன்னெடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத அலுவலகங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நூதன திட்டம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி அரசு அலுவலகம், தனியார் கட்டிடங்கள், பள்ளிகள், மற்றும் வீடுகள் என சுமார் 5 கோடிக்கு வரிப்பணம் செலுத்தாமல் உள்ளது. இந்நிலையில் […]
