பாலத்தில் தரை இறங்கிய இலகு ரக விமானமும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டில் மியாமி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 3 பயணிகளுடன் இலகுரக விமானம் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் இஞ்சின் திடீரென பழுதான நிலையில் அவசரமாக ஹாலோவர் பாலத்தில் தரை இறக்கியது. அந்த சமயம் பாலத்தில் வந்து கொண்டிருந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. […]
