மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரையம்பாளையம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் அஜித் குமார் மற்றும் அருண் ஆகிய 2 பேரும் இணைந்தது பழனிக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மகுடஞ்சாவடி […]
