சென்னையில் நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த கணவர் தனது சொந்த காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி உள்ளார். சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தனர். […]
