வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை காரில் கடத்திய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் அன்புச்செல்வன்(55). இவர் வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் பயணியர் விடுதி எதிரில் மூன்று நட்சத்திர ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் வத்தலகுண்டு பைபாஸ் ரோட்டில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து வெள்ளை நிற […]
