காய்கறி வியாபாரி கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் காட்டாத்துறை பருத்திக்கோட்டவிளை பகுதியில் காய்கறி வியாபாரியான கிறிஸ்டோபர்(47) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி ராஜினி(41). கிறிஸ்டோபர் நிறைய பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த கிறிஸ்டோபர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து […]
