காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 40 கடைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் கடையின் மேற்கூரையானது இடிந்து கீழே விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க. […]
