வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள செக்கான்காடு பகுதியில் மாரியம்மாள்(65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் மாரியம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
