டிஎஸ்கே மற்றும் சுனிதா இருவரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளனர். விஜய் டிவியில் காமெடிக்காக பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. இதில் சமீபத்தில் பிரம்மாண்டமாக துவங்கிய நிகழ்ச்சி ”காமெடி ராஜா கலக்கல் ராணி”. இந்த நிகழ்ச்சியின் பைனல் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா வருகை தந்தார். இந்நிலையில், போட்டியாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், டிஎஸ்கே மற்றும் சுனிதா இருவரும் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளனர். […]
