ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]
