பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் காமகோடியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 76 வயதுடைய இவர் எம்.எஸ். விஸ்வநாதனின் இறுதி காலம் வரை அவருடன் பணியாற்றியவர். இளையராஜா, தேவா, பரத்வாஜ் யுவன் என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் எழுதிய “என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் கவிதாஞ்சலி” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
