நெல் கொள்முதல் செய்ய தனியார் வங்கிகளில் கடன் பெற்றதன்மூலம் அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் உணவுத் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீணாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் இத்துறையின் கீழ் ஆட்சியாளர்கள் […]
