தமிழகம் முழுதும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. வட மதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அத்துடன் இயக்குனர் அருள்மணி முன்னிலை வகித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். அதன்பின் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையில் விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை […]
