பாகிஸ்தானில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பிரியந்தா என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரை அங்கிருந்து சக பணியாளர்கள் கடுமையாக தாக்கி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது, ஒரு நபர் பிரியந்தாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயற்சித்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வெளியானது. […]
