காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் […]
