கான்பூரில் பிட்புல், ராட்வீலர் ஆகிய நாய் இனங்களை வீடுகளில் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தலையை மீறி வளர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் நாயும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த வகை நாய்கள் அடிக்கடி மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து இவற்றை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நகர எல்லைக்குள் பயமுறுத்தும் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்கள் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
