ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் […]
