காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். வட நாட்டில் தண்டி எனுமிடத்தில் உப்புக்காய்ச்ச காந்தியடிகள் அவர்கள் தமது தொண்டர்களோடு நடந்துசென்றார். அதே தினத்தில் தென்னாட்டில் நம் மதிப்புக்குரிய இராஜாஜியும் அவரது தொண்டர்களும் வேதாரண்யம் என்ற இடத்தில் இருந்து அணிவகுத்துச் சென்று உப்பெடுத்தார்கள். அவ்வாறு அவர்கள் உப்புச்சத்தியாக்கிரகம் செய்யச் சென்ற போது தேசபக்தியை வளர்க்கத் தகுந்தபடி நம் கவிஞர் பெருமான் பாடிக் கொடுத்த பாடல்களை மிகவும் உற்சாகத்துடன் பாடிச்சென்றனர். அந்த பாடலை அச்சிட்டு ஆயிரக்கணக்கில் தமிழகமெங்கும் காங்கிரசுத் தலைவர்கள் […]