அமெரிக்காவில் உள்ள ஆசிரமம் ஒன்று மகாத்மா காந்தியின் அஸ்தி தங்களிடம் தான் இருக்கிறது என்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிச் சடங்குகளுக்கு பின் அவரது அஸ்தி 20க்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சில வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தியின் உலக அமைதி நினைவுச்சின்னம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இதனை பரமஹம்ச யோகானந்தா என்பவர் 1950இல் நிறுவியதாக […]
