தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்படு காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருது பரிசுத்தொகை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக […]
