தமிழ்நாடு ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் அனுமதியில்லாமல் இதுபோன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது […]
