நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான […]
